பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தினேஷ் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான பெண் சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்படத்தை தொடங்கினார்.\ அந்த சீரியலில் நடிகை சீதாவின் மகனாக நடித்தார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை சீரியலிலும் அட்டகத்தி தினேஷ் நடித்தார். குக்கூ திரைப்படத்தில் பார்வையற்றவராக நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, உள்குத்து, அண்ணனுக்கு ஜே, களவாணி மாப்பிள்ளை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை திரைப்படத்ஹ்டில் தினேஷ் நடித்தார். சமீபத்தில் அட்டகத்தி தினேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, பிரவுன் கலர் காக்கி கலர் டிரஸ் பார்த்தாலே எனக்கு சஃபர் ஆகும். நிறைய யோகா எல்லாம் சொல்லிக் கொடுத்தாங்க. ஒரு நாலு வருஷம் பேசுவதற்கு எனக்கு தயக்கம் இருந்துச்சு. நிறைய வாட்டி விசாரணை படத்தோட செகண்ட் பார்ட் எப்ப வரும்னு கேட்டாங்க.
விசாரணை படத்தோட ஃபர்ஸ்ட் பார்ட் இந்த மாதிரி ரியலா இன்னும் நடந்துகிட்டு இருக்கு அப்படிங்கறத சொல்றதுக்கு தான். ரியலாவும் நடக்க வேண்டாம். படமாகவும் வேண்டாம் அப்படிங்கறது என்னுடைய விருப்பமா இருக்கு. வெற்றிமாறன் சார் கேட்டாலும் விசாரணை 2 வேண்டான்னு சொல்லிடுவேன். ஆரம்பத்துல ஆக்டிங்னா என்னன்னு தெரியாது. நான் ரொம்ப கூச்சப்படுவேன். டப்பிங்கில் பேசுறதுக்கே எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கும் என கூறியுள்ளார்.