ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன்பு ‘அட்டகத்தி தினேஷ்’ நடித்த படம்.. எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க..!

By Nanthini on செப்டம்பர் 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அட்டகத்தி தினேஷ். அந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படம் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் இவரை அனைவரும் அட்டகத்தி தினேஷ் என்று அழைத்தனர். பிறகு எதிர்நீச்சல், குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை மற்றும் ஒரு நாள் கூத்து என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

   

இவருடைய நடிப்பில் வெளியான இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீப காலமாக இவர் நல்ல கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இந்த நிலையில் அட்டகத்தி தினேஷ் முதன்முதலாக நடித்த படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

   

 

அதாவது முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ஈ திரைப்படம் மூலம்தான் தினேஷ் துணை நடிகராக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். பின்னர் மௌனகுரு என்ற திரைப்படத்திலும் துணை நடிகராக நடித்த இவர் அட்டகத்தி படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமானார். இவருடைய நடிப்பில் இறுதியாக லப்பர்  பந்து திரைப்படம் வெளியானது. தற்போது இவர் முதல் முதலாக நடித்த படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

author avatar
Nanthini