வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தீ வைத்துக் கொள்ளும் அளவுக்கான தாக்குதல்கள் தொடர்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சரியாத்பூர் மாவட்டத்தில் கோகோன் தாஸ் என்ற 50 வயது நபரை கும்பல் ஒன்று தாக்கி அவர் மீது தீ வைத்துள்ளனர். அங்கிருந்து தப்பி ஓடியவர் குளத்தில் குதித்து உயிரை காப்பாற்றிக் கொண்டுள்ளார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துகள் அமைதியாக வாழ விரும்புவதாக தாக்குதலில் உயிரிழந்த கோகோன் தாசின் மனைவி சீமா தாஸ் தெரிவித்துள்ளார். யாருடனும் எந்த வாக்குவாதமும் செய்யாத என் கணவரை எதற்காக மிக கொடூரமாக கொலை செய்தார்கள் என்று தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். தன் கணவரின் தலையிலும் முகத்திலும் பெட்ரோல் ஊற்றி தாக்குதல் காரர்கள் தீ வைத்ததாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
