தோழியுடன் கோவிலுக்கு சென்ற ஷாகிரா….! “வயிற்றில் எட்டி உதைத்து, காதை கிழித்து…” உறவினர்களின் கொடூர செயல்…. பகீர் பின்னணி….!!

By Devi Ramu on கார்த்திகை 21, 2025

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியைச் சேர்ந்த ஷாகிரா என்ற பெண், தனது கணவர் ஃபாரூக்கின் அனுமதியோடு, தோழி வேண்டாமணியுடன் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலுக்குச் சென்றுள்ளார்.

இதனை அறிந்த ஷாகிராவின் தாய் சூர்யா, அண்ணன் அமீர் பாஷா மற்றும் அவரது மனைவி சபுரா ஆகிய மூன்று உறவினர்களும், கோவிலுக்குச் சென்றதைக் காரணம் காட்டி, ஷாகிரா மற்றும் அவரது தோழியைத் தாக்கியுள்ளனர். குறிப்பாக, ஷாகிராவின் தோழியான வேண்டாமணி வயிற்றில் எட்டி உதைத்து, படுகாயமடைந்த நிலையில் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

   

மேலும், ஷாகிராவைத் தாக்கிய அவர்கள், அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகையைப் பறித்ததால், அவரது காது கிழிந்தது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஷாகிராவும் அவரது கணவரும் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.