“சும்மா போனவங்கள வம்பு இழுக்கணுமா…?” ஆசிரியர் தம்பதி மீது தாக்குதல்… மர்ம கும்பலின் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2026

Spread the love

பீகார் மாநிலம் பெிகுசாராய் பகுதியில், துர்கா பூஜை திருவிழாவைக் கொண்டாடிவிட்டு பைக்கில் வீடு திரும்பிய ஆசிரியர் தம்பதியினரை 10 முதல் 15 பேர் கொண்ட வாலிபர் கும்பல் வழிமறித்துத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 22 அன்று இரவு, ஆசிரியர் தம்பதியினர் பி.எம். மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த கும்பல் அவர்களுக்குத் தொல்லை கொடுத்துள்ளது. இதனை அவர்கள் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தம்பதியினரை நடுரோட்டில் வைத்துத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கும் மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நேரில் சந்தித்து உரிய நீதி கேட்டு மனு அளித்துள்ளனர். இதற்கிடையே, குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களைப்பதிவு செய்து வருகின்றனர்.