குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு, அங்கு குடியிருக்கும் பெண் ஒருவரிடம் காவலாளி சிங் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்த பெண் உடனடியாகச் சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். நிலைமை கைமீறிப்போவத உணர்ந்த அந்த காவலாளி, அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார்.
இதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடிய காவலாளி சிங், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். காவல்துறையினர் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது தொலைபேசி எண் இயங்கவில்லை. இதனால் அவர் திட்டமிட்டே தலைமறைவாகியிருக்கலாம் எனப் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள காவலாளி சிங்கைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
