ஐயோ யாராவது காப்பாத்துங்க… மாணவிக்கு நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்… டெல்லியை உலுக்கிய பகீர் சம்பவம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

By Swetha on புரட்டாதி 24, 2026

Spread the love

வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் காரில் பயணித்த ஒரு கும்பலால், டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவி முகர்ஜி நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த சிலர் அவரைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், மாணவர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

   

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். குற்றத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.