உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞருடன் நட்பாகப் பழகி வந்த நிலையில், அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாக இருவரும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த இளம்பெண் கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் காதலன் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது தாத்தா-பாட்டியின் உதவியுடன் காவல் நிலையத்தில் தைரியமாக புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 சிறுவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
