பெற்றோர்களே உஷார்..! “2 வயது குழந்தையை 25 முறை கடித்த கொடூரம்” காப்பக அறையைப் பூட்டிவிட்டுச் சென்ற ஊழியர்… ரூ.10 லட்சம் கொடுத்து பேரம் பேசிய நிர்வாகம்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

Spread the love

மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு தனியார் பகல்நேர காப்பகத்தில் , ஊழியரின் அலட்சியத்தால் 23 மாதக் குழந்தை ஒன்று மற்றொரு குழந்தையால் 25 முறை கடிக்கப்பட்ட கொடூர சம்பவம் ஜூன் 22 அன்று நடந்துள்ளது. அன்று காலை வழக்கறிஞரான ஒரு தாய் தனது குழந்தையைக் காப்பகத்தில் விட்டுச் சென்றுள்ளார். அங்குள்ள ஊழியர் ஒருவர், மூன்று சிறுவர்களை ஒரு அறைக்குள் வைத்து வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு, சுமார் 30 நிமிடங்கள் யாரையும் கவனிக்காமல் விட்டுச் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

காப்பக ஊழியர் அறையைப் பூட்டிவிட்டுச் சென்றதால், பயத்தில் குழந்தைகள் அழத் தொடங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவன், மற்றொரு குழந்தையைக் கடிக்கத் தொடங்கினான். காலை 11 மணி முதல் 11:30 மணி வரையிலான 15 நிமிட இடைவெளியில், அந்தப் பிஞ்சு குழந்தையை அவன் சுமார் 25 முறை கடித்ததாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. தடுக்க யாரும் இல்லாததால், அந்தக் குழந்தை சுமார் 45 நிமிடங்கள் வலியால் துடித்து அழுதுள்ளது. இதனால் அந்தக் குழந்தையின் முகம், மூக்கு, உதடுகள், மார்பு, முதுகு மற்றும் கால்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணி வரை காப்பக நிர்வாகம் இச்சம்பவம் குறித்து பெற்றோருக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. பெற்றோர் குழந்தையை அழைக்க வந்தபோது, லேசான கீறல்கள் மட்டுமே விழுந்துள்ளதாகக் கூறி நிர்வாகம் மறைக்க முயன்றது. ஆனால் குழந்தையின் ஆடைகளைக் களைந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் வழக்குப் பதியாமல் இருக்க காப்பக நிர்வாகம் பெற்றோருக்கு 10 லட்சம் ரூபாய் பணமும், 3 ஆண்டுகள் இலவசக் கல்வியும் தருவதாக பேரம் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது காப்பகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி , மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“திமுக – அதிமுக ரகசிய கூட்டணியா?… “என்னை மீறி செங்கல்லைக் கூட வைக்க முடியாது!” – தமிழக அரசுக்கு சீமான் பகிரங்க எச்சரிக்கை…!!

மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமனை ஆதரித்து அச்சரப்பாக்கத்தில் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

3 minutes ago

ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த CM விஜய்…. மதுராந்தகத்தில் ஒர்க் அவுட் ஆகுமா இந்த ஃபார்முலா?… அதிரும் அரசியல் களம்….!

மதுராந்தகத்தில் இன்று நடைபெறவுள்ள 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி' பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்காமல் கூட்டணி கட்சி…

15 minutes ago

“விசிகவில் உச்சகட்ட மோதல்?”…. ரூ.755 கோடி தங்க மோதிர திட்டத்தில் திருமாவளவன் vs வன்னி அரசு…. அதிர்ச்சி திருப்பம்….!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள இருவேறு பார்வைகளும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட…

19 minutes ago

CM விஜய்யுடன் மேடையில் அமமுக MLA…. தவெகவில் ரகசிய இணைப்பு…. கலக்கத்தில் டிடிவி தினகரன்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் முன்னணி சக்தியாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய், தாராபுரத்தில் நடத்திய பிரச்சாரப் பொதுக்கூட்டம்…

23 minutes ago

நார்வேஜியன் 4×4 வொர்க்அவுட்…! இந்த ஒரு பயிற்சியை செய்தால் போதும்…! உங்க இதயத்தை ஸ்ட்ராங்காக வைக்க டாக்டர் சொல்லும் டிப்ஸ் இதோ…!

தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே பலர் இதயம் தொடர்பான கடுமையான…

1 மணத்தியாலம் ago

சீச்சீ… என்னடா இது கொடுமை… சுவிக்கியில் ஆர்டர் செய்த முட்டைகள்… அழுகிய நிலையில் டெலிவரி… இணையத்தில் வெடித்த உணவு பாதுகாப்பு விவாதம்…!

சுவிக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்து பெறப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக பயனர் ஒருவர் பகிர்ந்த சமூகவலைதளப் பதிவு…

1 மணத்தியாலம் ago