இனி ஆதார் கார்டு இருந்தா மட்டும் போதும்… ATM-ல் ஈஸியா பணம் எடுக்கலாம்… இதோ முழு விவரம்…!

By Nanthini on ஆனி 24, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அதிகமாகவே உள்ளது. முன்பெல்லாம் எந்த ஒரு சேவையை பெற வேண்டும் என்றாலும் நாம் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் தற்போது இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக முடித்து விடுகிறோம். அதனைப் போலவே பலம் எடுப்பதற்கு கூட யாரும் வங்கிக்கு செல்வது கிடையாது. ஏடிஎம் மூலமாக பணம் எடுத்து விடுகின்றனர்.

இப்படியான நிலையில் ஏடிஎம் கார்டு இல்லாமல் பலம் எடுக்கும் நடைமுறை தற்போது வந்துள்ளது பலருக்கும் தெரியாமல் உள்ளது. அதாவது ஆதார் கார்டை பயன்படுத்தி AEPS மூலமாக பணம் எடுக்கும் வசதியை NPCI வழங்குகின்றது. இதன் மூலமாக உங்களின் 12 இலக்க ஆதார் எண் மற்றும் ஆதார் கார்டின் பயோமெட்ரிக் விவரங்களை பயன்படுத்தி பணம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் பல பரிமாற்றம் மற்றும் பேலன்ஸ் பார்ப்பது ஆகியவற்றையும் எளிதில் அறியலாம். AEPS அம்சம் கொண்ட மைக்ரோ ஏடிஎம்மில் இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.