ராஜா ராணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அடுத்தடுத்து விஜய் நடித்த தெறி, மெர்சல் , பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த நான்கு படங்களுமே கிட் அடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற அட்லி அங்கு முதல் படமே ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் நயன்தாராவும் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்தது .
இதனை அடுத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து படம் எடுக்க இருக்கிறாராம். இது தவிர அங்கு பட தயாரிப்பிலும் பிசியாக இருக்கிறார். அதன்படி பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் தயாரிப்பாளராக என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்தார். கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நடித்த முதல் திரைப்படம் இதுதான்
இந்த திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் ஆனது. இது விஜய் நடித்த தெறி படத்தின் ரீமேக். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது .சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடி கூட வசூலிக்கவில்லை. இதனால் அட்லிக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் பட தயாரிப்பை கைவிட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய அடுத்த படத் தயாரிப்பை விரைவில் அறிவிக்க உள்ளாராம். பேபி ஜான் படம் பலத்த அடி வாங்கியதால் சாஹித் கபூர் நடிக்கும் படத்தை ரீமேக் படமாக இல்லாமல் நல்ல கதை அம்சம் கொண்ட படமாக எடுக்க அட்லீத் திட்டமிட்டுள்ளாராம்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…