#image_title
அட்லீ தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபல இயக்குனர் ஆவார். தற்போது பான் இந்தியா அளவிலும் பிரபலமாக இருக்கிறார். ஆரம்பத்தில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக தனது கேரியரை தொடங்கினார் அட்லீ. பின்னர் ஆர்யா நடிப்பில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
2016 ஆம் ஆண்டு விஜயை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து விஜய் உடன் இணைந்து மெர்சல் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். அதற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது அடுத்ததாக சல்மான் கானை வைத்து அட்லீ படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அட்லீ இயக்கி வெற்றி பெற்ற தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆக பேபி ஜான் திரைப்படம் அடுத்த வாரம் ரிலீசாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் வருன் தவான் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மூலமாக பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் அட்லீ. அப்படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் அட்லீ.
பாலிவுட் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் அட்லீக்கு பேபி ஜான் படத்தை South Side இல் ஸ்கிரீனிங் செய்வதற்கு போதுமான ஸ்கிரீன் கிடைக்கவில்லையாம். டிஸ்ட்ரிபியூட்டர்களும் அமையவில்லையாம். அதனால் அட்லி வளரக்கூடாது அவர் முன்னேறக்கூடாது என்று சதி வேலைகள் நடக்கிறதோ அதனால் வாய்ப்பு தர மறுக்கிறார்களோ என்று சினிமா வட்டாரங்களில் பேச்சுக்கள் நிலவி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…