atlee

ஒரு பெரிய நிகழ்ச்சியில் அட்லீயை உருவகேலி செய்த தொகுப்பாளர்… அதற்கு அவர் கொடுத்த Thug ரிப்ளை என்ன தெரியுமா…?

By admin on மார்கழி 16, 2024

Spread the love

அட்லி தமிழ் சினிமாவில் பணியாற்றும் இயக்குனர் தற்போது பான் இந்தியா அளவில் இயக்குனராகவும் பிரபலமான இயக்குனராகவும் இருந்து வருகிறார். இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார் அட்லி. எந்திரன் மற்றும் நண்பன் ஆகிய திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

   

2016 ஆம் ஆண்டு விஜயை வைத்து தெறி திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் மெகா ஹிட் ஆனது. தொடர்ந்து விஜயை வைத்து மெர்சல் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவை அனைத்துமே நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்ற இயக்குனர் அட்லி ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்து இந்திய அளவில் பிரபலமான ஒரு இயக்குனராக ஆனார் அட்லி.

   

அடுத்ததாக சல்மான் கானை வைத்து படம் இயக்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அட்லி. இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து ஹிட்டான திரைப்படமான தெறி பாலிவுட்டில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தொகுப்பாளர் கபில் சர்மா அட்லீயை உருவ கேலி செய்வது போல் பேசியிருக்கிறார்.

 

கபில் ஷர்மா அட்லீியிடம் சினிமாவில் அவர் வளர்ந்து வந்த விதத்தைப் பற்றி கேட்கும் போது லைட்டாக உருவ கேலி செய்தது போல் இருந்தது. அதற்கு Thug ரிப்ளையை அட்லீ கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் இங்கு உருவம் எதுவும் பெரிசல்ல நல்ல திறமையும் நல்ல மனதும் இருந்தாலே ஜெயிக்கலாம் என்று நெத்தியடி பதிலை கூறியிருக்கிறார் அட்லீ. தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.