இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. வங்கி கணக்கு முதல் அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஏனெனில் ஆதார் என்பது எங்கு போனாலும் மிக முக்கியமான ஒரு ஆவணமாகவே தேவைப்படுகிறது.
இந்நிலையில் ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 1 ஜூலை ஆம் தேதி முதல் IRCTC இல் ஆதார் எண்ணை பயன்படுத்தி VERIFY செய்யப்பட்ட கணக்குகளில் மட்டுமே தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று புதிய கட்டுப்பாடு இந்தியன் ரயில்வே விதித்துள்ளது. மேலும் தட்கல் சேவையின் பயன் பொதுமக்களுக்கும் முழுமையாக சென்று சேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
IRCTC இல் ஆதார் லிங்க் செய்ய முதலில் உங்களுடைய ஐ ஆர் சி டி சி கணக்கில் லாகின் செய்து account பகுதியில் உள்ள authentication என்பதை தேர்வு செய்ய வேண்டும். அங்கு ஆதார் நம்பரை உள்ளிட்டு sent OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு மொபைலுக்கு வரும் ஓடிபி நம்பரை டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் கார்டில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி ஐஆர்சிடிசியில் உள்ளது ஒத்திருக்க வேண்டும். ஆதார் இணைப்பு செய்தால்தான் இனி தட்கல் முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…