வளர்த்து விட்டவரயே மதிக்காமல் இருக்கும் பிரதீ.. ஹீரோவானதால் தலைக்கு ஏறிய மிதப்பில் திரியும் மாமா குட்டி..

By Ranjith Kumar on பங்குனி 5, 2024

Spread the love

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி பட தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான ஐசாரி கே. கணேஷ் பிரதீப் அவர்களை மீண்டும் படம் இயக்குவதற்காக அழைத்துள்ளார், ஆனால் பிரதீப் ரங்கநாதன் அவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா?. 2019 ஆண்டு பிரதீப் ரங்கநாதன் அவர்கள் இயக்கத்தில் ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால், வருன், சமியுத்தா கெட்ஸ், கவிதா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து, படம் வெளியாகி திரையரங்கில் மாபெரும் வெற்றியை கண்டது. 90 காலகட்டத்தில் எதிர்பாராமல் நடந்த விபத்தால் கோமாவிற்கு சென்ற கதாநாயகன் 10 வருடம் கழித்து தற்போது இருக்கும் காலகட்டத்தில் கோமாவில் இருந்து கண் விழித்து இந்த காலகட்டத்தில் நடைபெறும் நிகழ்வுகளை புரிந்து கொள்ள முடியாமல் அதற்கு இடைப்பட்ட நேரத்தில் நடக்கும் காமெடி டிராமா மற்றும் கருத்துக்களை வெளி கொண்டு வரும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. இப்படம் பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கும் ஜெயம் ரவி அவர்களுக்கும் சினிமாவில் அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு சென்றது என்று கூறலாம். இயக்குனர், இப்பட வெற்றிக்கு தயாரிப்பாளர் கணேஷ் அவர்கள் தன் மேல் வைத்த நம்பிக்கைதான் காரணம் என்று பல மேடைகளில் கூறி இருக்கிறார்.

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி பட வெற்றிக்குப் பின் தயாரிப்பாளர் கல்பாத்தி அககோரம் அவருடன் இணைந்து “லவ் டுடே” என்ற படத்தை இயக்கி இவரே நடித்து இரண்டாவது படத்திலே 100 கோடி கிளப்பில் இணைந்து இந்திய அளவில் மாபெரும் வெற்றியை கண்டார். லவ் டுடே படத்தில் இவர் இயக்கத்தின் திறமையை தாண்டி நடிப்பின் திறமை பெரும் அளவு பேசப்பட்டு வந்தது, அதனால் அடுத்தடுத்து இவர் நடிப்பதற்கு பல படங்கள் வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறது, அந்த வரிசையில் ஒன்றுதான் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கத்தில் LIC என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதிப் ரங்கநாதன்.

   

இந்த சமயத்தில்தான் முதல் படமான கோமாளி தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் மீண்டும் நம் கூட்டணியில் ஒரு படம் இயக்குவோம் என்று பிரதீப் ரங்கநாதன் அவர்களை அழைத்துள்ளார். ஆனால் பிரதீப் ரங்கநாதன் அவர்கள் தற்போது இவருக்கு எந்த பதிலும் அளிக்காமல், இயக்குனர் பதவியை சற்று நாள் தள்ளி வைத்துவிட்டு நடிப்பதில் முழு ஆர்வம் காட்டி வருகிறார். பிரதீப் ரங்கநாதன் வெற்றி தலைக்கு எறியதோ என்னமோ? முதல் பட வெற்றிக்கு காரணமாக இருந்த தயாரிப்பாளரையே தற்போது உதாசீனம் படுத்தி வருகிறார். இதற்குப் பல ரசிகர்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.