#image_title
அதர்வா நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று வெளியாகி இருக்கும் திரைப்படம் நிறங்கள் மூன்று. இந்த திரைப்படத்தில் சரத்குமார் ரகுமான் அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் எப்படி இருக்கிறது அதர்வாக்கு இது கை கொடுக்குமா இல்லையா என்பதை பற்றியா முழு விமர்சனத்தை இனி காண்போம்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இந்த நிறங்கள் மூன்று திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் நாயகனான அதர்வா இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். இதில் அவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் போல் காட்டப்பட்டு இருக்கிறது. போதை போட்டால் தான் நாயகனால் கதை எழுத இயலும் என்பது போல் காட்டியிருக்கிறார்கள்.
இதில் அனைவரும் விரும்பும் ஆசிரியராக ரகுமான் நடித்திருக்கிறார். சரத்குமார் லஞ்சம் வாங்கும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒரு இரவில் அம்மு அபிராமி கடத்தப்படுகிறார். அதர்வா எடுக்கும் குறும்படத்தில் இளம்பெண்ணை கடத்தும் காட்சி எடுக்கப்படுகிறது. அப்போது அம்மு அபிராமியை தேடி அலையும் அவரது சக பள்ளி மாணவன் ஒருதலையாக அபிராமியை காதலித்துக் கொண்டிருக்கும் துஷியந்த் தேடிக் கொண்டிருக்கிறார்.
ஆகவே அம்மு அபிராமி சரத்குமார் ரகுமான் அதர்வா இந்த நால்வரும் எப்படி சந்திக்கிறார்கள் அவர்களுக்கு பின்னால் என்ன கதை இருக்கிறது என்று ஓவர்லாப்பாக படம் வருகிறது. இந்த படத்தின் விமர்சனமாக பார்க்கப்படுவது முதலில் இந்த படத்தில் அதிகப்படியான போதைப்பொருட்களை பயன்படுத்துவது போல் காட்டி இருக்கிறார் இயக்குனர். இது அந்த அளவுக்கு பார்வையாளர்களுக்கு திருப்தியாக இல்லை.
அதர்வா நன்றாக நடித்திருந்தாலும் அது படத்துடன் சேரவில்லை. மேலும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பார்வையாளர்களிடம் ஒரு கனெக்ட் ஆகாமல் இருப்பது போல் இருக்கிறது. சரத்குமாரின் நடிப்பு அவரது காட்சிகள் எல்லாம் கைத்தட்டல்களை தரும் அளவிற்கு இருக்கிறது. மொத்தத்தில் இந்த திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதர்வா நடிப்பில் வெளிவந்திருந்தாலும் இது அவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். எதிர்பார்த்த அளவுக்கு நிறங்கள் மூன்று ஸ்கோர் செய்யவில்லை.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…