அட கடவுளே.. இதெல்லாமா குடுப்பிங்க.. திடீரென பாக்கெட்டிலிருந்து எடுத்து நமிதாவ்க்கு கிஃப்ட் கொடுத்த ரசிகர்..(வீடியோ)

By Begam

Updated on:

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் கவர்ச்சியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை நமீதா. மிஸ் சூரத், மிஸ் இந்தியா போன்ற பட்டங்களை பெற்றவர் நடிகை நமீதா. விஜயகாந்த், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் போன்றவர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சாணக்யா, ஆணை, எங்கள் அண்ணா, அழகிய தமிழ் மகன், பில்லா, இந்திர விழா, ஜகன்மோகினி ,பம்பரக் கண்ணாலே ,வியாபாரி, நான் அவனில்லை போன்ற பல திரைப்படங்கள் இவர் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்தது.

   

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘மியா’. நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் 2017 ஆம் ஆண்டு இந்திய திரைப்பட நடிகரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பின்னர் ஒப்பந்தம் செய்த படங்களில் மட்டும் நடித்து முடித்தார்.

இவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என்று தனது குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். அதோடு இவர் உடல் எடையை குறைத்து அப்படியே ஆளே மாறி போய் தற்பொழுது காணப்படுகிறார்.

இந்நிலையில் நடிகை நமீதா சேலம் ஏர்போர்ட்டிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு கூடிய  ரசிகர்கள் பலர் அவருடன் செல்பீ மற்றும் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். அவர்களில் ஒரு ரசிகர் திடீரென பாக்கெட்டிற்குள் கையை விட்டு கார்டு போல ஏதோ ஒன்றை நமீதாவிடம் கொடுத்தார். அப்பொழுது அவர் பயந்து ஷாக்கான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…