19 வயதில் 40 வயது நடிகருடன் இணைந்து நடிக்கவுள்ள அஜித்தின் ரீல் மகள் அனிகா… அதுவும் இந்த மாதிரி கதாபாத்திரத்திலா?…

By Begam on ஆவணி 2, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அனிகா. இவர் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகை நயன்தாராவிற்கு இரண்டு முறை மகளாக நடித்துள்ளார். விசுவாசம் திரைப்படம் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்திருப்பார்.

   

இதைத் தொடர்ந்து பின் மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இவர் தற்பொழுது மலையாளத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

   

 

இப்படத்தில் ஹீரோவுடன் லிப் கிஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்த நடிகை அனிகா இதனால் சர்ச்சைகளிலும் சிக்கினார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் புட்டபம்மா என்ற திரைப்படம் வெளிவந்தது. இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கலவையான  விமர்சனங்களையே பெற்றது.

இந்நிலையில் நடிகை அனிகா தனுஷ் இயக்கி நடிக்கும் 50 வது படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் போஸ்டர் கூட சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி வைரலானது. வட சென்னை பகுதியில் கெங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங், தற்போது தொடக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.அந்த கேங்ஸ்டர் உலகில் ஒரு தைரியமான பெண்ணாக அனிகா நடிக்கவுள்ளாராம்.