4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

By Visaka on ஆடி 6, 2026

Spread the love

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின் கவனத்தைத் திசைதிருப்பி சிறுகச் சிறுக 50 சவரன் தங்க நகைகளைத் திருடிய மீஞ்சூரைச் சேர்ந்த ரிஹானா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கடையின் கணக்கெடுப்பின் போது நகைகள் மாயமானது தெரியவந்ததை அடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் எம்.கே.பி. நகர் குற்றப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவரைப் பிடித்தனர். அவரிடமிருந்து 20 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்; மேலும் மீதமுள்ள நகைகளை மீட்க விசாரணை தொடர்ந்து வருகிறது.

மற்றொரு சம்பவத்தில், சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை இருசக்கர வாகனத்தில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த அயனாவரத்தைச் சேர்ந்த பார்த்திபன் (49) என்பவரை போலீசார் கைது செய்தனர். இரகசிய தகவலின் பேரில் டி.பி.சத்திரம் போலீசார் நடத்திய சோதனையில், அவரிடமிருந்து ஹான்ஸ், விமல் உள்ளிட்ட 24.2 கிலோ எடையுள்ள குட்கா பாக்கெட்டுகள், 26 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரும் விசாரணைக்குப் பின் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.