திடீரென தனது லுக்கை மாற்றிய ‘அசுரன்’ பட நடிகை… இப்படி மாறிட்டாங்களே… வைரலாகும் புகைப்படம் இதோ….

By Begam

Published on:

நடிகை மஞ்சுவாரியரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் 1978 இல் நாகர்கோயிலில் பிறந்தார். நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த நடன கலைஞராகவும் விளங்கியவர். தனது 17 வயதில் இவருக்கு முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. 1995இல் மலையாள திரை உலகத்தில் கால் பதித்த இவர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் மோகன்லால், சுரேஷ்கோபி, ஜெயராம், திலீப் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமானார்.

   

தேசிய திரைப்பட சிறப்பு விருது, சிறந்த நடிகைகைக்கான கேரளா அரசு விருது என பல விருதுகளுக்கும் சொந்தக்காரரானார். 1998ல் இவர் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2014இல் விவாகரத்து பெற்றனர்.

இவருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார். இவர் தற்பொழுது தனது மகளுடன் தனித்தே வாழ்ந்து வருகிறார். நடிகை மஞ்சு வாரியார் நடிப்பில் 2014 இல் வெளியான ‘ ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் மலையாளத்தில் செம ஹிட் அடித்தது. இத்திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் ’36 வயதினிலே’. இதில் நடிகை ஜோதிகா நடித்து கலக்கி இருப்பார்.

இப்படி கதாநாயகிகளுக்காக கதை எழுதும் ஒரு ட்ரெண்ட் மலையாளத்தில் உருவாக காரணமாக அமைந்தவர் நடிகை மஞ்சு வாரியார். இவர் பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியாரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.