விஜய் ஜாதகத்தில் சுக்கிர திசை… அண்ணாமலைக்கு அடித்தது ‘விபரீத ராஜயோகம்’…. 2034 வரை தமிழ்நாட்டை ஆளப்போவது இவர்தானா?… ஜோதிடர் ஷெல்வி சொன்ன அந்த உண்மை…!

By Nanthini on வைகாசி 26, 2026

Spread the love

பிரபல எதார்த்த ஜோதிடர் ஷெல்வி, தமிழக அரசியலின் தற்போதைய முக்கிய இளந்தலைவர்களான விஜய், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை ஆகியோரின் ஜாதகங்களை அலசி, எதிர்காலம் குறித்த அதிரடி கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் ஜாதகத்தில் பலமான ‘நீச்சபங்க ராஜயோகம்’ இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் அவருக்கு ராகு புத்தி நடந்ததால், யாரும் எதிர்பாராத வகையில் ஒரு அண்டர் கரண்ட் (Undercurrent) வேலை செய்து, பலரது கணக்குகளையும் தவிடுபொடியாக்கி தவெக 108 இடங்களைக் கைப்பற்றி சாதித்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

இருப்பினும், தவெக ஆட்சி அமைந்தாலும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை விஜய் சில சவால்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேரிடும் என்றும், கூட்டணி தர்மத்தை அவர் சரியாகக் கையாண்டால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்றும் ஜோதிடர் கணித்துள்ளார். மேலும், விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் போல மிகவும் கண்டிப்பான ஒரு தலைவராக உருவெடுப்பார். சட்டம் ஒழுங்கு விவகாரம், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு போன்ற மிக முக்கியமான விஷயங்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல், தேவைப்பட்டால் குற்றவாளிகளுக்கு எதிராக ‘என்கவுன்ட்டர்’ போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் தயங்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

   

விஜய்யின் ஜாதகப்படி 2034-ஆம் ஆண்டு வரை சுக்கிர தசை மற்றும் சூரிய தசை பலமாக இருப்பதால், அரசியலில் அவர் நீண்ட காலத்திற்கு அசைக்க முடியாத சக்தியாக நிலைத்திருப்பார். அதே நேரத்தில், கடக ராசியைச் சேர்ந்த அவருக்கு தற்போது ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்றும், கட்சிக்காரர்களால் தேவையற்ற சங்கடங்களும் கெட்ட பெயரும் வரலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம் என்றும் கூறியுள்ளார். மற்றொரு முக்கிய தலைவரான உதயநிதி ஸ்டாலின் ரிஷப ராசி என்பதால், தசாபுத்தி மாற்றங்களால் அவர் தனது உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

   

மறுபுறம், பாஜாக தலைவர் அண்ணாமலையின் கடக ராசி ஜாதகத்தில் ‘விபரீத ராஜயோகம்’ உள்ளதால், அவர் விரைவில் மத்திய அமைச்சராகவோ அல்லது அதற்கு இணையான பெரிய பதவிகளையோ அடைவார் என்று ஷெல்வி கணித்துள்ளார். அதே சமயம், அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-க்கு நடக்கும் புதன் தசை காரணமாக சில அவமானங்களையும் சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என்றும், சீமான் கூட்டணி வைக்காத வரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார். ஒட்டுமொத்தமாக, தமிழக அரசியல் களம் இனி கடக ராசிக்காரர்களான விஜய் – அண்ணாமலை மற்றும் ரிஷப ராசிக்காரரான உதயநிதி ஆகிய மூவரைச் சுற்றியே அனல் பறக்கும் போர்க்களமாக மாறப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்!