மணிக்கு 16904 மீட்டர் வேகத்தில் பயணித்து பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் விண்கல் ஒன்று ஜூலை 30 அதாவது நாளை பூமியை மிக நெருக்கத்தில் கடந்து செல்ல உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2025 ஜூலை 30ஆம் தேதி பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் 2025 ஓ எல் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு சிறிய ரக விமானத்தின் அளவில் உள்ளதாகவும் 1.29 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இது பூமியை பாதுகாப்பாக கடந்து செல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பூமிக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்திருப்பதாகவும் ஆனால் பூமிக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று நாசா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற விண்கல்கள் தொடர்ந்து விண்வெளியில் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தி பூமிக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் என்றால் அதனை தடுக்கும் உபாயங்களை கண்டறிவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே நாசா மற்றும் இஸ்ரோ போன்ற விண்வெளி ஆய்வு மையங்களுக்கு எச்சரிக்கை தகவலாக அமைந்துள்ளது. இந்த விண்கல் மிக வேகமாக பயணிப்பதால் மிக விரைவாக பூமியை கடந்து சென்று விடும் எனவும் இது பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும்போது விஞ்ஞானிகள் இதை கொண்டு அடுத்த கட்ட ஆய்வுகளை நடத்த உதவும் என்றும் கூறப்படுகின்றது.
தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…
ஈரானின் உச்ச தலைவராக சுமார் 35 ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி காமேனி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்க…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. திமுக,…
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…
கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் ஏப்ரல் 20-ம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், டிசம்பர் 5, 2026…