மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை கிடையாது..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on ஆனி 1, 2026

Spread the love

மாற்றுத்திறனாளிகளுக்கான ₹2,000 உதவித்தொகைத் திட்டத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் எந்தவித முறையான காரணமும் இன்றி புதிய விண்ணப்பங்களை நிராகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உதவித்தொகை கிடையாது என்று அதிகாரிகள் கூறி வருவதால், அவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் (SM) விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே நிலம் வைத்திருந்து, தற்போது இந்த மாற்றுத்திறனாளி உதவித்தொகையைப் பெற்று வருபவர்களுக்கும் இனிமேல் இது நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என்ற அச்சமும், கேள்வியும் சமூக ஊடகங்களில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இச்செய்தி மாற்றுத்திறனாளிகள் மத்தியில் தங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.