அதிக ரெட் கார்டுகளை பெற்ற அசிம்!…. போட்டியாளர்களுக்கிடையே நடந்த ஓபன் நாமினேஷன்!… வெளியானது ப்ரோமோ இதோ!…

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 70 நாட்களைக் கடந்து தற்பொழுது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

   

இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு தனலட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார். போட்டியாளர் தனலட்சுமியின் வெளியேற்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தனலட்சுமி நன்றாக தானே விளையாடினார் அவரை ஏன் பிக் பாஸ் வெளியேற்றினார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அத்துடன் கமலஹாசன் போட்டியாளர் விக்ரமனுக்கு எப்பொழுதும் ஆதரவாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நாளின் முதல் பிரமோவில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. இதில் அமுதவாணன் மற்றும் அசீம் கடுமையாக போட்டியிட்டனர். அமுதவாணன் வெற்றி பெற்று பிக் பாஸ் வீட்டின் தலைவராக்கப்பட்டுள்ளார்.

இதை தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது பிரமோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களின் இடையே ஓபன் நாமினேஷன் நடைபெறுகின்றது. இதில் ஹவுஸ்மேட்ஸ் அதிக ரெட் கார்டினை அஸீமுக்கு கொடுத்துள்ளனர். தற்பொழுது இந்த பிரமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….