பிரபல நடிகரான தனுஷ் இயக்கி நடித்த திரைப்படம் ராயன். இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம். ராயன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி சூப்பர் ஹிட் ஆனது. ஓடிடி-யில் வெளியான பிறகு ராயன் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அடுத்ததாக தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தனுஷ் இயக்கும் நான்காவது படத்திற்கு இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மேலும் அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
தேனிக்கு அருகே படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடும்பத்தில் நடக்கும் சிறு சிறு பிரச்சனைகளால் ஏற்படும் விளைவுகளை மையமாக வைத்து இட்லி கடை படம் இயக்கப்படுகிறது. ராயன் திரைப்படத்தைப் போல ஆக்சன் படமாக இல்லாமல் பீல் குட் படமாக எளிமையாகவும், எதார்த்தமாகவும் தனுஷ் படத்தை எடுத்து வருகிறாராம்.
இந்த நிலையில் அசோக் செல்வன் இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அசோக் செல்வன் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். முதலில் தனுஷ் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டபோது அசோக் செல்வன் கதையை கேட்காமலேயே ஓகே சொல்லிவிட்டாராம். அதன் பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று பார்த்த போது தனது கதாபாத்திரம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லையாம். இதனால் அந்த படத்தில் இருந்து அசோக் செல்வன் விலகியதாக கூறப்படுகிறது.