Connect with us

CINEMA

நம்பர் பிளேட்க்கு பின்னாடி இப்படி ஒரு சென்டிமெண்டா..? பெற்றோருக்கு பல லட்ச ரூபாய் சொகுசு காரை பரிசளித்த அசோக் செல்வன்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அசோக் செல்வன். இவர் ‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார்.  இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் இறுதியாக வெளியான சபாநாயகன், ப்ளூ ஸ்டார்’ திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் காதலித்து சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். கீர்த்தி பாண்டியன் தும்பா மற்றும் அன்பிற்கினியால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘கண்ணகி’ திரைப்படம் நல்ல வசூலையும் , வரவேற்பையும் பெற்றது.

தற்பொழுது இவர்கள் தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். நடிகர் அசோக் செல்வன் தனது அம்மா , அப்பாவிற்கு 40 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அவரது தாயாரே பேட்டி ஒன்றில் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். மேலும் தனது மருமகள் குறித்து கூறிய அவர்,

கீர்த்தி ரொம்ப பாசமான மருமகள். எங்களுக்கு என் மகன் டொயோட்டா ஹைக்ராஸ் ஹைப்ரிட் காரைப் பரிசளிச்சான். அந்த கார் என் கணவரோட கனவு கார். அந்த காரோட நம்பர் பிளேட் BF 1986. 1986 எங்களுக்கு கல்யாணம் நடந்த வருஷம். என் மருமக கீர்த்தி தான் பிளான் பண்ணி இதுபோல ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கி இருக்காங்க.” என்று மிகவும் சந்தோசமாக குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top