Connect with us

CINEMA

பூ குடுத்து propose செய்த கீர்த்தி பாண்டியன்… கட்டியணைத்து முத்தமிட்ட அசோக் செல்வன்… புதுமண தம்பதிகளின் கியூட் வீடியோ…

‘சூது கவ்வும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் அசோக் செல்வன்.

   

தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. இந்நிலையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வமும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கீர்த்தி பாண்டியன் தும்பா மற்றும் அன்பிற்கினியால் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பா ரஞ்சித் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் இவர்கள் இருவரும் நடித்துவரும் நிலையில் அப்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் இன்று திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள இன்டெரியில் நடந்து முடிந்துள்ளது.இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது இவர்களது திருமணத்தின் ஒருபகுதியாக நடிகர் அசோக் செல்வனை கீர்த்தி பாண்டியன் பூ குடுத்து propose செய்துள்ளார். பின்னர் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். இந்த ரொமான்டிக் வீடியோவானது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

Continue Reading

More in CINEMA

To Top