பில்லா 2 படத்தில் இளம் வயது அஜித்தாக அசோக் செல்வன்.. அவரே பகிர்ந்த சுவாரஸிய நிகழ்வு…

By Divya

Updated on:

சினிமாவில் உச்சபட்ச நடிகராக இல்லாவிட்டாலும், ஒரு சில ஹீரோக்கள் அனைவருக்கும் பிடித்தப்படியாக இருப்பர். அவர்களது படங்களுக்கு என ரசிகர்கள் இருப்பர். அவர்களது நடிப்பும் படத்திற்கு படம் வேறுபடும். அப்படியான ஒரு நடிகர் அசோக் செல்வன். சூதுகவ்வும், தெகிடி, பில்லா 2 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது சபாநாயகன், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அஷோக் செல்வன்

பார்ப்பதற்கு சாக்லேட் பாயாக இருந்தாலும் இவரது படங்கள் அனைத்தும் ஃபீல் குட் மூவியாகவே பெரும்பாலும் இருக்கும். அந்த பாதையை மாற்ற போர்த்தொழில் உள்ளிட்ட திரில்லர் படங்களிலும் நடித்து, தனது பாணி இது மட்டும் தான் என அடக்கிக் கொள்ளாமல் அனைத்து விதமான ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் தனது மனைவி கீர்த்தி பாண்டியனுடன் நடித்திருந்தார் அசோக் செல்வன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றியும் பெற்றது.

   
அஷோக் செல்வன்

இப்படத்தின் வெற்றி விழாவின் போது, அசோக் செல்வன் பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது எனலாம். ஒருசில படங்களில் கடுமையான உழைப்பைக் கொடுத்தும் மக்கள் அதற்கு கைத்தட்டாமல் இருப்பது பெரிய கஷ்டத்தைக் கொடுப்பதாக பலமுறை கீர்த்தி பாண்டியனிடம் சொல்லி புலம்பி இருப்பதாக அசோக் கூறியது, கீர்த்தியை கண்கலங்க வைத்தது. ஆனால் ப்ளூ ஸ்டார் படத்தில் அந்த கனவு நனவாகியதாகவும், என் காட்சியை பார்த்துவிட்டு மக்கள் கை தட்டியதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப இதமாக இருந்தது என்று அசோக் செல்வன் பேசினார்.

அஷோக் செல்வன்

அசோக்கை பற்றிய ஒரு சுவாரசியமான தகல் இணையத்தில் உலா வருகிறது. பில்லா 2 படத்தில் அஜித்தின் சிறுவயது கதாபாத்திரத்தில் அசோக் செல்வனின் புகைப்படங்கள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர்களில், பில்லாவின் சிறுவயது வாழ்க்கை வரலாற்றை கூறும் விதமாக அமைந்திருக்கும். அப்போது சிறு வயது அஜித்தாக அசோக்கின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அஜித்திற்கு வில்லனாக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் அசோக், அவரது சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பது முதல் வெற்றி என்றே கூறலாம்.