‘நீ இன்றி நானும் இல்லை’… மனைவிக்கு வாழ்த்துக் கூறி ஆர்யா வெளியிட்ட புகைப்படம்.. இது தான் விஷியமா..?

By Ranjith Kumar

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் “ஆரியா”. இவர் சினிமாவில் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் அவர்கள் இயக்கத்தில் “அறிந்தும் அறியாமலும்” என்ற படம் மூலமாக தமிழ் சினிமா துறைக்கு முதல் முதலாக அறிமுகமானார். அதன் பின்னதாக பட்டியல், நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இவர் ஆரம்ப காலகட்டத்தில் தந்தார்.

அதன் பின்னதாக பெரிய நடிகராக வளர்ந்து வந்து, சிறிது காலம் இடைப்பட்டு மீண்டும் மாபெரும் வெற்றி படங்களை குவிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் சார்பட்டா பரம்பரை, ஆரம்பம், டெடி போன்ற படங்களில் நடித்து தற்போது தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். இவர் தெலுகு, மலையாளம், தமிழ் போன்ற படங்களில் முன்னணி இயக்குனர்களுடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல நடிகையான “ஆயிஷா” என்பவரை சந்தித்து காதலித்து 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார்.

   

ஆயிஷா 2015 ஆம் ஆண்டு “அகில்” என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமாகி, அதன் பின்னதாக தமிழ் திரை உலகில் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, டெடி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த “கஜினிகாந்த்” என்ற படம் மூலம் ஆர்யா அவர்களுடன் நடித்தார். அதன் பின் நண்பர்களாக பழகி காதல் செய்து வந்தார்கள். அதன் பின்னதாக 2019 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இரு வீட்டார் சம்பந்தத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். தமிழ் திரை உலகில் இவர்களின் கல்யாணத்தை பார்த்து பலரும் வாயடைத்துள்ளார்கள்.

இப்படி ஒரு நல்ல தம்பதியர்களா! என்று தற்போது வரை இவர்கள் ஜோடி தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரும் ரசிக்கும் படி உள்ளார்கள். சூர்யா ஜோதிகா போல் இவர்களும் ஒரு சிறந்த தம்பதியர்கள் ஆக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட நான்கு வருடம் முடிந்துள்ளது, அதற்காக ஆர்யாவும், ஆயிஷாவும் சேர்ந்து தன் இன்ஸ்டாகிராம் இணையதள பக்கத்தில் தங்களின் திருமண வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்கள். இதைக் கண்ட ரசிகர்கள், இவர்களின் காதல் திருமண பயணத்தில் இன்றுவரை சிறப்பாக வாழ்வதைக் பார்த்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar