விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவான திரைப்படம் மதகஜராஜா. 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டாலும் சில பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த திரைப்படத்தை தயாரித்தது ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டிங். இந்த நிறுவனம் தொடர்ந்து கடன் பிரச்சினைகளால் இப்ப படத்தை வெளியிடாமல் இருந்து வந்தது. விஷாலும் இந்த படத்தை வெளியிடுவதற்கு பல முயற்சிகளை செய்து கடைசியில் கைவிட்டு விட்டார். திரைப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனு சூட், அஞ்சலி மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மயில்சாமி, மனோபாலா மற்றும் சிட்டிபாபு என பலரும் நடித்திருந்தனர்.
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். மதகஜராஜாவை சுருக்கமாக எம்ஜிஆர் என்று அழைத்து வந்தனர். இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் எப்போது வரும் அப்போது வரும் என்று தகவல் மட்டுமே வெளியாகிக் கொண்டிருந்தது. ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இந்த படம் 2013 ஆம் வருடம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல பொருளாதார சிக்கலால் வெளியாகவில்லை.
ஒரு கட்டத்தில் இந்த படத்தையே ரசிகர்கள் மறந்து போன நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த படத்தின் வெளியீட்டு தேதி சாத்தியமாகியுள்ளது. அதாவது இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆடியோ லாஞ்சு சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது. இதில் விஷாலும் கலந்து கொண்டார். அப்போது அவர் கை, கால் நடுக்கத்துடன் கண்ணெல்லாம் சிவந்து காணப்பட்டார். இதனால் அவருக்கு வைரல் காய்ச்சல் என்றும் மருத்துவமனை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால் வலைப்பேச்சு அந்தணன், அவன் இவன் படத்தில் விஷால் மாறுகண் வைத்ததால் தான் பிரச்சினையே வந்தது. அப்படி வைத்ததால் ஏற்பட்ட வலியால் தினமும் குடித்து இப்படி ஒரு பிரச்சினைக்கு ஆகிவிட்டார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து வலைப்பேச்சு டீம் பேசுகையில், “விஷாலின் இந்த பிரச்சினையை தெரிந்த அவருடைய நண்பர்கள் அவரை தேடி வீட்டுக்கே வந்துட்டாங்களாம். ஆர்யா பாம்பேயிலிருந்து சென்னைக்கு வந்து, எல்லோருமாக சேர்ந்து விஷாலை வீட்டை விட்டு வெளியே கூட்டி வந்து வெளியே அழைத்து சென்று ஜாலியாக வைத்து அவரை சரி செய்யலாமா என நினைத்துள்ளார்களாம். விஷாலுக்கு ஒரு பிரச்சினை இருக்கு. ரெண்டு நாட்கள் தூங்கவே மாட்டாராம். அடுத்து 3 நாட்கள் தொடர்ந்து தூங்குவாராம்” என்று பேசியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கை இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர்…
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…