அருண் விஜய் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர் ஆவார். இவரது தந்தை விஜயகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மூத்த நடிகர் ஆவார். அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1995ஆம் ஆண்டு முறை மாப்பிளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் அருண் விஜய். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்த வருகிறார் அருண் விஜய். பாண்டவர் பூமி வேதா துணிச்சல்போன்ற பல திரைப்படங்களில் நடித்தாலும் 2015 ஆம் ஆண்டு அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் அருண் விஜய் பிரபலமாகி திருப்புமுனையை பெற்றார்.
தொடர்ந்து குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து புகழின் உச்சியில் இருக்கிறார் அருண் விஜய். இந்நிலையில் தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாக்ஸராக நடித்திருக்கிறார் அருண் விஜய்.

இது சம்பந்தமாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு அருண் விஜய் ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் பாக்சர் என்ற திரைப்படம் உருவாகி வந்தது. அதற்காக அருண் விஜய் ஒரு வருடம் கஷ்டப்பட்டு உடலை தயார் செய்தார். ஆனால் சில காரணங்களுக்காக அந்த படம் டிராப் ஆகிவிட்டது. இந்நிலையில் அதே பாக்ஸராக நடிக்கும் வாய்ப்பினை தனுஷ் அருண் விஜய்க்கு வழங்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் அவர் கண்டிப்பாக ஸ்கோர் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
