அறிமுக இயக்குனருடன் இணையும் மிஷன் நாயகன்.. வெற்றியை தக்க வைப்பாரா அருண் விஜய்..?

By Priya Ram

Published on:

பிரபல நடிகரான அருண் விஜய் பாலா இயக்கத்தில் ஒரு உருவான வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1 படம் வெற்றி பெற்றது.

   

இந்நிலையில் அருண் விஜயின் அடுத்த படத்தை இயக்க போகும் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. என்னங்க சார் உங்க சட்டம் என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரபு ஜெயராம்.

அந்த படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் கடந்த 2021-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அருண் விஜய் வைத்து பிரபு ஜெயராம் ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் படம் போலவே பிரபு ஜெயராம் இரண்டாவது படத்தில் ஒரு சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து தான் கதைக்களத்தை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரமும் ,அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Priya Ram