ஓடாத படத்துக்கு சக்ஸஸ் மீட் வைக்குறவங்களுக்கு மத்தியில்.. தனது படத்தின் சக்ஸஸை ரசிகர்களுடன் சிம்பிளாக கொண்டாடிய அருண் விஜய்..

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.

arun7

#image_title#image_title#image_title#image_title#image_title#image_title#image_title

   

இதைத்தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார்.

2012ல் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம்,

சாகோ போன்ற மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அருண் விஜய். தற்பொழுது இவர் வணங்கான் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த திரைப்படம் மிஷன் சாப்டர் 1. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. பொங்கலுக்கு வெளியான படங்களில் மிஷன் படத்துக்கு தான் பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

மிஷன் திரைப்படத்தின் வெற்றியால் செம்ம குஷியில் உள்ள அருண் விஜய், தற்போது தன்னுடைய ரசிகர்களுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

அங்கு அருண் விஜய்யை பார்த்ததும் அவருடன் வந்து ஏராளமான பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.