உறுதியான இளையராஜாவின் பயோபிக்.. பல கண்டிஷன்களுடன் தனுஷ் பட இயக்குனரை புக் செய்த இசைஞானி..

By Ranjith Kumar

Updated on:

இளையராஜாவின் மிக பெரிய ரசிகரான இயக்குனர் “பால்கி” இளையராஜாவின் “சுயசரிதையை” (Biography) படமாக இயக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்னால் வெளியிட்டு இருந்தார். இந்த சுயசரிதை இளம் வயது இளையராஜாவாக நடிக்கப் போவது மாபெரும் நடிப்பு அரக்கன் “தனுஷ்”, இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தனுஷின் அணுகியபோது தனுஷும் இந்த விஷயத்தில் மிகவும் பெருமிதம் கொண்டு ஓகே சொல்லி இப்படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து இருந்தார்கள.

இப்படத்தின் கதை முழுவதும் பால்கி எழுதி முடித்து படப்பிடிப்பு தொடங்குவதற்காக சில பல வேலைகளை ஆரம்பித்திருந்த நிலையில், தற்போது இளையராஜா தனுஷின் படத்தை இயக்கலாம் ஆனால் இயக்குனர் பால்கி வேண்டாம், வேற யாராவது வைத்து இயக்கலாம் என்று முடிவெடுத்துள்ளாராம்,அதற்காக அவர் பல இயக்குனர்களை தேடி வருகிறார், ஆனால் தனுஷ் தன்னிடம் இருக்கும் இயக்குனரான மாரி செல்வராஜ், அருள் மாதேஸ்வரன் இவர் இருவர்களையும் இளையராஜாவிடம் அனுப்பி கதை சொல்ல வைத்தாராம், தற்போது இளையராஜா யோசித்து வருகிறாராம், ஆனால் இளையராஜாவின் மிக பெரிய ரசிகரான “பால்கி” தான் இந்த சுயசரிதியை உருவாக்க நினைத்தார், ஆனால் தற்போது பால்கி அவர்களை இப்படத்தில் இருந்து வெளியேற்றி விட்டார்களாம்.

   

தனுஷ் அனுப்பிய மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இவர்களில் இளையராஜாவுக்கு இரண்டு பேருமே பிடித்துப் போனது, ஆனால் இளையராஜா அவர்கள் தனுஷை வைத்து இயக்கிய கேப்டன் மில்லர் படம் மிக சிறப்பாக உருவாக்கிய விதம் இளையராஜாவுக்கு பிடித்துப் போக சுயசரிதத்தை இயக்க அருள் மாதேஸ்வரன் அவர்களை இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார்களாம். இதற்காக அருள் மாதேஸ்வரனை 2 மாத காலம் தன்னோடு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இளையராஜா கேட்டுக்கொண்டார்.

அப்பொழுதுதான் முடிந்து போன பல சுவாரஸ்யமான விஷயங்களை ஞாபகப்படுத்தி உன்னிடம் கூற முடியும், அதை நீ எழுதி படமாக படைக்க முடியும் என்று இளையராஜா கூறியிருக்கிறார், அதற்காக தன்னுடன் இரண்டு மாத காலம் கூடவே பயணித்து நடந்த சம்பவங்களை பற்றி நன்கு கேட்டு அறிந்து அதை கதையாக எழுத வேண்டும் என்று இளையராஜா அருண் மாதேஸ்வரிடம் கேட்டதற்கு இவரும் ஓகே என்று சொல்லி இருக்கிறார். தற்போது தனுஷ் அவர்கள் நடிப்பு உருவாகி கொண்டிருக்கும் ராயன் படபிடிப்பு முடிந்தபின் இளையராஜா சுயசரிதம் படம் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

 

author avatar
Ranjith Kumar