தனுஷ் அவர்களின் நடிப்பில் இளையராஜாவின் (bio pic) சுயசரிதத்தை அருண் மாதேஸ்வரன் அவர்கள் இயக்குகிறார்கள். அதில் மிகப் பிரபல இசை அமைப்பாளர் சிறப்பு வேடத்தில் (cameo roll) வர இருக்கிறாராம். கடந்த சில நாட்களாகவே இளையராஜாவின் பயோ பிக் எடுக்கப்படும் என்று சில தகவல்கள் வெளியாகி கொண்டிருந்தது. இப்பொழுது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
70 காலகட்டத்தில் இருந்து தற்போது வரை இளையராஜா பாடல் என்றாலே மக்களுக்கு மிகவும் பிடிக்கும். கிட்டத்தட்ட 40 வருட காலமாக சினிமாவில் இசை மலையில் அனைவரையும் நனைய வைத்த கொண்டிருக்கிறார். கோட்டையின் மேல் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவர் வாழ்க்கையை இசைக்காக மட்டுமே அர்ப்பணித்திருக்கிறார்,
இவர் ஆயிரக்கணக்கில் படங்களுக்கு இசை அமைத்துள்ளார், பல விருதுகள் இவர் பெற்றுள்ளார், அதில் நேஷனல் அவார்ட் சேரும். ரஜினி கமலில் இருந்து தற்போது சூரி அவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் வரை இளையராஜா இசையமைத்திருக்கிறார். 60 லிருந்து 6 வயது குழந்தை வரை இவரை தெரியாத யாரும் இல்லை. இப்படிப்பட்ட இவரின் வாழ்க்கையை பயோபிக்காக தனுஷ் அவர்கள் நடித்து வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தனுஷ் படத்தை இயக்கி வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த கேப்டன் மில்லர் பட இயக்குனர் “மாதேஸ்வரன்” அவர்கள் இப்படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தில் இசையமைப்பாளரும் இளையராஜா தான். படத்தில் மேலும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இளையராஜாவின் ஒரு தோற்றத்திற்கு இசை புயல் “ஏ ஆர் ரகுமான்” அவர்கள் சிறப்பு வேடத்தில் (cameo roll) நடிக்க உள்ளாராம்.
