நடிகர் கமலஹாசனின் லட்சிய திரைப்படமான மருதநாயகம் கடந்த 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் பண சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து அந்த படத்தை உருவாக்க முடியவில்லை. இந்த படத்தின் தொடக்க விழாவில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டார்.

பிரம்மாண்டமான முன்னோட்ட காட்சிகள், தொடக்க விழா என மருதநாயகம் படம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில் நிதி நெருக்கடி காரணமாக படம் கைவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் அளித்த பல்வேறு பேட்டிகளில், மருதநாயகம் பற்றிய கேள்விக்கு அந்த படத்தின் பட்ஜெட்டிற்கு எந்த ஒரு தயாரிப்பாளராவது முன் வந்தால் மீண்டும் படம் தொடங்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் மருதநாயகம் படம் குறித்து யாரும் அறிந்திராத தகவலை ஆர்ட் டைரக்டர் பிரபாகரன் கூறியுள்ளார்.

அதாவது படப்பிடிப்பின் போது ஒரு அருவியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் டூப் போடாமல் அவரே கீழே குதித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஒரு மாட்டின் மீது கமல்ஹாசன் அமர்ந்து செல்லும் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளிவந்திருந்தால் மிகப்பெரிய வரலாற்று திரைப்படமாக இருந்திருக்கும் என அவர் கூறியுள்ளார்.
