காலையிலேயே ஷாக்… விஜய்க்கு அடுத்த சிக்கல்… கைதாகும் முக்கிய புள்ளிகள்…. தொடரும் பரபரப்பு…!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

கடந்த வாரம் சனிக்கிழமை தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்காதது, விஜய் கட்சியின் அலட்சியப் போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த எதிர்பாராத விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய்க்கு ஒரு தரப்பு ஆதரவாகவும் மற்றொரு தரப்பு எதிராகவும் மாறி உள்ளது.

குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதால் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தன்னுடைய கூட்டணியை அதிமுக மற்றும் பாஜகவுடன் அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் இதற்கு தூண்டில் போடும் விதமாக இப்போது டெல்லி தலைமை விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

   

இந்நிலையில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகி நிர்மல் குமாரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் மூவரும் கைதாகும் நிலை உருவாகியுள்ளது. இது தமிழக வெற்றிக் கழகம் தலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது.