சதித்திட்டம் அம்பலம்: தவெக ஆட்சியை கவிழ்க்க நடந்த நள்ளிரவு சதி… சிக்கிய ஆடியோ ஆதாரங்கள்…. காலையிலேயே ஷாக்….!

By Nanthini on ஆடி 15, 2026

Spread the love

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், போலீசார் மேலும் ஒருவரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உசிலம்பட்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) விஜய் மகாலிங்கத்தைப் பதவி விலகச் செய்வதற்காக, அவரது உதவியாளரிடம் கைதான நபர் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தின்போது, கட்சித் தலைமைக்கு எதிராகவும், தீர்மானத்திற்கு முரணாகவும் அந்த சட்டமன்ற உறுப்பினர் செயல்பட வேண்டும் என்று கைதானவர் வற்புறுத்திப் பேசியதாகவும் போலீஸ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.