BREAKING: முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது விவகாரம்…! நீதிமன்றத்தின் அதிரடி முடிவு…!!

By Devi Ramu on ஆவணி 7, 2026

Spread the love

ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த அதிரடி பிடிவாரண்ட் உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் பொன்முடி இன்ற காலை தாமாகவே நீதிமன்றத்திற்குச் சென்று நேரில் ஆஜரானார்.

நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக நேற்று பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை நீதிமன்றம் திரும்பப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் கடைசி நிமிடத்தில் காவல்துறையின் கைது நடவடிக்கையிலிருந்து பொன்முடி தப்பியுள்ள சம்பவம், அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.