Connect with us

17 வருட மனஸ்தாபம்.. 7 நாட்களில் சொன்னதை செய்த வசனகர்த்தா.. மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் பாலாஜி..!!

CINEMA

17 வருட மனஸ்தாபம்.. 7 நாட்களில் சொன்னதை செய்த வசனகர்த்தா.. மகிழ்ச்சியடைந்த தயாரிப்பாளர் பாலாஜி..!!

பழம்பெரும் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான கே.பாலாஜி தமிழ் திரை உலகில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக பணியாற்றியவர். இவர் பல்வேறு படங்களை தயாரித்துள்ளார். படித்தால் மட்டும் போதுமா பலே பாண்டியா உட்பட தமிழ் படங்களில் பாலாஜி நடித்துள்ளார். பாலாஜி தயாரித்த பெரும்பாலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் ஏ.எல் நாராயணன். பாலாஜி முதலில் அண்ணாவின் ஆசை என்ற படத்தை தயாரித்தார். பின்னர் சிவாஜி கணேசன் நடித்த தங்கை படத்தை தயாரித்தார்.

நல்ல ரசிகர் கே.பாலாஜி; அதனால்தான் நல்ல தயாரிப்பாளர்! | k.balaji -  hindutamil.in

 

   

இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ். சுமார் 10 நாட்களில் இந்த படத்திற்கான வசனத்தை ஆரூர் தாஸ் எழுதி முடித்துவிட்டார். அடுத்தடுத்து தான் தயாரிக்கும் படங்களுக்கான வசனத்தை ஆரூர் தாசன் எழுதி கொடுக்க வேண்டும் என பாலாஜி ஆசைப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை. ஏனென்றால் அதே சமயத்தில் பல படங்களில் கமிட் ஆனதால் ஆருர்தாசால் பாலாஜி நினைத்தபடி வசனத்தை எழுதி கொடுக்கவில்லை.

 

எம்.ஜி.ஆருக்கு பிடிக்காத செயலை செய்ததால் பட வாய்ப்புகளை இழந்த கதாசிரியர்…  அடப்பாவமே!! - CineReporters

அந்த சமயத்தில் தான் ஏ.எல் நாராயணன் பாலாஜி தயாரிக்கும் படங்களுக்கு வசனம் எழுதிக் கொடுத்தார். பல ஆண்டுகள் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் சுமார் 17 ஆண்டுகள் கழித்து பாலாஜி ஆரூர் தாசை தொடர்பு கொண்டு தனது அலுவலகத்திற்கு வருமாறு அழைக்கிறார். ஆரூர் தாஸ் தயக்கம் காட்டியதால் அவரது மனைவி போய் என்னவென்று கேட்டு வாருங்கள் என தனது கணவரை அனுப்பி வைக்கிறார். அங்கு வைத்து பாலாஜி விதி படத்திற்கு வசனம் எழுத வேண்டும்.

Kollywood Famous Dialogue writer AaroorDass passed away at the age of 91 | Aaroor  Dass: தமிழ் திரையுலகின் பழம்பெரும் வசனகர்த்தா காலமானார்..! சோகத்தில் தமிழ்  திரையுலகம்..

ஆனால் ஒரு வாரத்திற்குள் அதற்கான வசனத்தை எழுதி முடித்து தாருங்கள் என கேட்டுள்ளார். உங்கள் படத்திற்கு ஏ.எல் நாராயணன் வசனம் எழுதுகிறார். இப்போது நான் எழுதினால் சரியாக இருக்குமா? என ஆரூர் தாஸ் கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி அவர் இந்த படத்திற்கு வசனம் எழுதவில்லை. இது பற்றி ஏற்கனவே பேசி முடிவு எடுக்கப்பட்டது. நீங்கள் வேண்டுமானால் அவரை தொடர்பு கொண்டு கேட்டு அதன் பிறகு விதி படத்திற்கான வசனத்தை எழுதலாம் என பாலாஜி கூறியுள்ளார்.

K. Balaji - Wikipedia

ஏனென்றால் பாலாஜி ஒரு வாரத்தில் வசனம் எழுதி டிசம்பர் மாதத்திற்குள் ஷூட்டிங் முடித்து ஜனவரி மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டார. இதனை தொடர்ந்து ஆரூர் தாஸ் படத்திற்கான வசனத்தை எழுத ஒப்புக்கொண்டார். உடனே பாலாஜி தனது மேஜையைத் திறந்து உள்ளே 100 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருக்கிறது. உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

விதி: தமிழ் சினிமாவின் விபரீதமான மரபை உடைத்த படம்; சுஜாதாவின் நடிப்பு,  கே.பாக்யராஜின் அந்த கேமியோ! | Vidhi: This movie broke the most important  stereotype of Tamil Cinema ...

அதனை முன் பணமாக வைத்தாலும் சரி சம்பளமாக எடுத்துக் கொண்டாலும் சரி என கூறியுள்ளார். நான் எழுதி முடித்துவிட்டு ஜனவரி மாதம் சம்பளப் பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என ஆரூர் தாஸ் கூறியுள்ளார். அவர் கூறியபடியே சுமார் 7 நாட்களில் விதி பணத்திற்கான வசனத்தை ஆருர்தாஸ் எழுதி முடித்துக் கொடுத்தார். அவர் எழுதிய வசனங்கள் விதி படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் வசனம் எழுதுவதற்கும் ஆரூர் தாசுக்கு வாய்ப்பு கிடைத்தது.

\தமிழ் சினிமாவின் பழம்பெரும் கலைஞர் ஆரூர் தாஸ் மரணம்… முதல்வர் இரங்கல்!

author avatar
Priya Ram
Continue Reading
To Top