டி-ஷர்ட்டை அசைத்து உதவி கேட்ட வாலிபர்…. ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவம்… இணையத்தில் வைரலாகும் உயிரைக் காப்பாற்றும் நெகிழ்ச்சி வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 27, 2026

Spread the love

நேபாள நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேபாள ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்ட ஆபத்தான மீட்புப் பணியின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

வெள்ள நீரால் சூழப்பட்ட கட்டடம் ஒன்றின் மொட்டை மாடியில் இளைஞர் ஒருவர் சிக்கிக் கொண்டார். சுற்றிலும் சீறிப் பாயும் வெள்ளமும் கழிவுகளும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவ்வழியாக வந்த ராணுவ ஹெலிகாப்டரை நோக்கித் தனது டி-ஷர்ட்டை அசைத்து அந்த இளைஞர் உதவி கோரினார்.

   

உடனடியாகக் களமிறங்கிய நேபாள ராணுவ ஹெலிகாப்டர், கட்டடத்தின் கூரைக்கு அருகே மிகவும் ஆபத்தான முறையில் சென்று, ராணுவ வீரரின் உதவியோடு அந்த இளைஞரைப் பாதுகாப்பாக மீட்டு ஹெலிகாப்டருக்குள் ஏற்றியது.

   

போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் நிலவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ஹெலிகாப்டர் மீட்புப் பணிகள் மூலமாகப் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. நேபாள ராணுவத்தின் இந்தத் துணிச்சலான மீட்பு நடவடிக்கைக்கு இணையவாசிகள் பலர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.