பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பலூரில் தன்னுடைய வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த கொடூர கொலைக்கு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இன்று ஆம்ஸ்ட்ராங் நினைவு நாளை முன்னிட்டு பல இடங்களில் பேரணி நடத்த கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் மறைந்த தன் கணவர் ஆம்ஸ்டாங்கின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவருடைய மனைவி பொற்கொடி புதிய கட்சியை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
