என் சாவுக்கு இவன்தான் காரணம்… ஆம்ஸ்ட்ராங் நிழல் பாம் சரவணன் கைது… நடுநடுங்க வைத்த போலீஸின் அதிரடி ஆக்ஷன்… திடுக்கிடும் உண்மைகள்…!

By Swetha on ஆவணி 11, 2026

Spread the love

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியும், மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளருமான ‘பாம் சரவணன்’ என்பவரை அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் திருவள்ளூர் அருகே அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட தென்னரசுவின் சகோதரரான இவர் மீது 6 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 37-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது புளியந்தோப்பு காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2024 ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரபல தாதா நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த நாகேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக 2025 அக்டோபர் 9 அன்று காலமானார்.

   

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை சிபிஐ வசம் சென்றுள்ள நிலையில், சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரணையைத் தொடங்கவுள்ளனர். இச்சூழலில் கைது செய்யப்பட்டுள்ள பாம் சரவணனிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையின் முடிவில், வழக்கு தொடர்பாகவும் அவரது பின்னணி குறித்த பல்வேறு கூடுதல் தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.