ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்… ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!

Spread the love

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 12 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஜாமீனில் வெளிவந்த 12 பேரும் வரும் மார்ச் 6-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதியரசர் கே. ராஜசேகர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அஸ்வதாமன் உள்ளிட்ட பலரை காவல்துறையினர் கைது செய்தனர். முன்னதாக, இந்த வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த சூழலில், விசாரணை தற்காலிகமாக முடங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டி கீழமை நீதிமன்றம் இவர்களுக்கு ஜாமீன் வழங்கியிருந்தது.

இந்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியில் இருந்தால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். தமிழக காவல்துறையும் இவர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்திருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அஸ்வதாமன், பிரதீப், ஹரிஹரன் உள்ளிட்ட 12 பேரின் ஜாமீனை ரத்து செய்தார். இருப்பினும், இந்த வழக்கில் கைதான அஞ்சலை மற்றும் மலர்க்கொடி ஆகிய இரு பெண்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த தீர்ப்பு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதி கேட்டுப் போராடி வரும் அவரது குடும்பத்தினரிடையே முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.

Nanthini

Recent Posts

“மேடையிலேயே கண்கலங்கிய எடப்பாடியார்”… கையெடுத்து கும்பிட்டு சொன்ன அந்த ஒரு வார்த்தை… அதிர்ந்த எடப்பாடி தொகுதி…!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, தொகுதி மக்கள் காட்டிய அன்பால்…

1 minute ago

“உங்களுக்கு அனுமதியில்லை” ட்ரம்பை வெளியே நிறுத்திய ராணுவம்… அதிரடி ஆப்பரேஷனில் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்..? கசிந்த ரகசியத் தகவல்கள்..!!

ஈரானில் நடந்த அமெரிக்க எஃப்-15 (F-15) விமானப்படை வீரர்களை மீட்கும் ரகசிய நடவடிக்கையின் போது, அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்பாட்டு…

2 minutes ago

“விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சி”.. திருச்சியில் ‘திக் திக்’ நிமிடங்கள்… தந்தி டிவி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்… கலக்கத்தில் தொண்டர்கள்,,,!

தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள நேரடி அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரம்பூர் மற்றும்…

11 minutes ago

“முயல் பிடித்துத் தருவதாக ஆசை வார்த்தை”… 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… வேலூரில் நடந்த பகீர் சம்பவம்…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விடுமுறைக்கு வந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சமையல் மாஸ்டர் போக்சோ…

15 minutes ago

“என்னங்கடா பொரி உருண்டை எல்லாம் தர்றீங்க”… தொண்டரின் பரிசைப் பார்த்து மேடையிலேயே சிரித்துவிட்ட விஜய்…. வைரல் வீடியோ …!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. திமுக,…

19 minutes ago