அமரன் படத்திற்கு முன்பே மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை கௌரவப்படுத்திய நடிகர் அர்ஜூன்.. வெளிவந்த புகைப்படங்கள்..!

By Nanthini on கார்த்திகை 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்து கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் மூலம் மேஜர் முகுந்த்  வரதராஜனின் குடும்பத்தையும் அவரையும் பட குழுவினர் கௌரவப்படுத்தியுள்ளனர்.

Who is Major Mukund Varadarajan : தீவிரவாதிகளை தொடைநடுங்க வைத்த தமிழன்;  யார் இந்த 'அமரன்' முகுந்த் வரதராஜன்?

   

ஆனால் இதற்கு முன்பே மேஜர் முகுந்து வரதராஜனின் குடும்பத்தை அர்ஜுன்  மேடையில் பெருமைப்படுத்தியுள்ளார். அதாவது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஜெய்ஹிந்த் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் எல்லையில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினரை அழைத்து பாலா மரியாதை செய்துள்ளார்.

   

மேஜர் முகுந்த் குடும்பத்தினரை ஜெய்ஹிந்த் 2 விழா மேடையில் கவுரவப்படுத்திய  அர்ஜுன்! | Arjun honours Major Mukund family - Tamil Filmibeat

 

ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் எழுதிய இயக்கி தயாரித்து நடித்த திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் 2. கதாநாயகியாக சுர்வின் சாவ்லா நடித்திருந்தார். புதுமுகமாக சிம்ரன் கபூர் என்ற மும்பை நடிகை ஒருவரும் அறிமுகமானார். இவர்களை தவிர ராகுல் தேவ், பிரம்மானந்தம், அதுல் மாதூர், மயில்சாமி, பாலா, கௌதம் சுந்தர்ராஜன் மற்றும் பரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

அர்ஜுன் ஜெனியா இசையமைக்க வைரமுத்து மற்றும் பா விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்த சமயத்தில் இந்த விழா மேடையில் தான் மேஜர் முகுந்து வரதராஜன் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டனர். காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் உடனான மோதலில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீரமரணம் அடைந்தவர் முகுந்த் வரதராஜன்.

ஜெய்ஹிந்த்-2 இசை வெளியீட்டு விழா படங்கள்

அவரது தந்தை, மனைவி மற்றும் மகள் ஆகியோரை அர்ஜூன் மேடைக்கு அழைத்து கௌரவித்தார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்ஜுன் பேசுகையில், இந்த இசை வெளியீட்டு விழாவை ஜெய்ஹிந்த் படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எங்களுக்கு ரியல் ஹீரோவான மேஜர் முகுந்த் அவர்களின் ஞாபகம்தான் வந்தது. தேசத்திற்காக உயிர் துறந்த அந்த மேஜரின் குடும்பத்தை அழைத்து அவர்கள் முன்னிலையில் இந்த விழாவை நடத்த விரும்பினேன்.

அர்ஜுன்

முதலில் தயங்கிய அவர்கள் பிறகு ஒப்புக் கொண்டனர். அவர்களை மேடைக்கு அழைத்ததன் மூலம் இந்த விழா சிறப்பு பெற்றது என அர்ஜுன் பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு, ஐஸ்வர்யா அர்ஜுன், கானா பாலா, இயக்குனர் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாலா வெளியிட...

இயக்குனர் பாலா இசை தட்டை வெளியிட மேஜர் முகுந்து வரதராஜனின் மகள் பேபி ஆர்ஷியா மற்றும் படத்தில் நடித்துள்ள பேபி யுவினா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 10 வருடங்களுக்கு முன்பே மேஜர் முகுந்த் வரதராஜனை கௌரவப்படுத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.