தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். விஜயகாந்த் நடிகர் என்பதை தாண்டி நல்ல உள்ளம் கொண்டவர். தமிழ் சினிமா உலகில் உள்ள பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் எல்லாம் விஜயகாந்த் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் தான். இந்த நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை தமிழ் சினிமாவில் விஜயகாந்த் தான் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1984 ஆம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நன்றி. இந்த திரைப்படம் மூலம்தான் அர்ஜுன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். கன்னடத்தில் வெளியான தாலியா பாகியா என்ற திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் நன்றி. இந்தப் படத்தை நடிகர் ஏவிஎம் ராஜன் தயாரித்திருந்தார். முதலில் இந்த படத்தில் அர்ஜூன் நடித்த வேடத்தில் விஜயகாந்தை தான் நடிக்க வைக்க இருந்தார்கள். ஆனால் விஜயகாந்த் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டுள்ளார்.

அதை தயாரிப்பு நிறுவனம் தர மறுத்து விட்டது. பிறகு கன்னடத்தில் நடித்த நடிகரையே இந்த படத்திலும் நடிக்க வைக்கலாமே என்று விஜயகாந்த் ஆலோசனை கூற பிறகு தான் அர்ஜுனை நன்றி படத்தில் நடிக்க வைத்துள்ளனர். இந்தத் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து அர்ஜுன் மிகப்பெரிய பிரபலமானார். இதற்கு காரணம் விஜயகாந்த் தான். அன்று தொடங்கி இன்று வரை அர்ஜுன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
