திருச்சி மாவட்டத்தில் முசிறியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. சில வருடங்களாக தமிழ் துறை பேராசிரியராக நாகராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கல்லூரியில் படிக்கும் பல மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். மாணவிகளும் படிப்பு கெட்ட விட கூடாது என்ற எண்ணத்தில் யாரிடமும் சொல்லாமல் இது போன்ற வேதனையை அனுபவித்து வந்துள்ளனர். இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவியிடம் சகஜமாக பேசி நெருங்கி பழகி வந்துள்ளார். மனைவியிடம் சண்டை எனக் கூறி 17 வயது மாணவிக்கு போன் செய்து தொல்லை செய்துள்ளார். நீயாவது என்னுடன் பேசு என்று வற்புறுத்தி உள்ளார். அந்த மாணவி தோழிகளிடம் இந்த விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார்.
ஆதாரத்துடன் பேராசிரியரை மாட்டி விட வேண்டும் என்று சக மாணவிகள் நீ தொடர்ந்து அவரோடு போனில் பேசு என்று கூறியுள்ளனர். அப்பொழுது நாகராஜ் மாணவிக்கு போன் செய்து உனக்கு என்னை பிடிக்குமா இல்லையா? எனக்கும் என் மனைவிக்கும் சண்டை என்னுடைய தேவையை பூர்த்தி செய்ய யாருமில்லை, நான் என்ன கேட்டாலும் குடுப்பியா, நீ தான் எனக்கு வேணும், நீ மொத்தமா எனக்கு வேணும், இதுக்கு உனக்கு சம்பந்தன்னா வெள்ளை டிரஸ் போட்டுட்டு தலையில் பூ வைத்துக்கொண்டு வா. தனிமையில் இருப்பதற்காக மாணவியை இது போன்ற வார்த்தையை கூறி அழைத்துள்ளார் நாகராஜன். போனில் ரெக்கார்ட் செய்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். கல்லூரியின் சார்பாக பல்வேறு விசாரணைகள் நடந்தது. அதில் பல மாணவிகள் புகார் அளிக்க முன் வந்துள்ளனர். ஆசிரியரே இதுபோல பாலியல் தொல்லை கொடுத்தது கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…