பிரபல இயக்குனரான கரு பழனியப்பன் முதலில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வந்தார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

அதன் பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை கரு பழனியப்பன் தொகுத்து வழங்கினார். வா தமிழா வா நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது வா தமிழா வா நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்க உள்ள நிலையில் கரு பழனியப்பன் நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார்.

மேலும் தனக்கும் சேனல் நிர்வாகத்தினருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, பனிசுமை அதிகமாக இருப்பதால்தான் நிகழ்ச்சிகளில் இருந்து விலகுகிறேன் என ஏற்கனவே கரு பழனியப்பன் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராதவிதமாக பிக் பாஸ் டைட்டில் வின்னரான ஆரி வா தமிழா நிகழ்ச்சியின் நடுவராக உள்ளார்.

சமீபத்தில் இது தொடர்பான ப்ரோமோ வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி வா தமிழா வா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதால் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே ஆரிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
View this post on Instagram
