மும்பை மின்சார ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில், மராத்தி மொழி பேசத் தெரியாத பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் இந்தியில் பேசியதற்குத் பயணி ஒருவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரயில்வே அதிகாரி கட்டாயமாக மராத்தி மொழியில்தான் பேச வேண்டும் என அப் பயணி வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த மராத்தி தெரிந்த மற்றொரு அதிகாரி தலையிட்டுப் பேசியபோதிலும், சக பயணிகளால் எடுக்கப்பட்ட இந்த மோதல் வீடியோ இணையத்தில் வெளியாகி மகாராஷ்டிராவில் மீண்டும் இந்தி மற்றும் மராத்தி மொழிப் போரைத் தீவிரப்படுத்தியுள்ளது.
https://www.instagram.com/reel/Dap2Fb7FtZY/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==
இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரும் அந்தேரி ரயில்வே பாதுகாப்புப் போலீசாரை (GRP) அணுகி நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளனர். வைரல் வீடியோ மற்றும் இச்சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள ரயில்வே உயர் அதிகாரிகள், முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் சட்டப்படியான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் தொட்டபள்ளாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில், 23 வயதான வித்யா என்ற பெண் அவரது கணவர் ஆனந்தால் ஐடி…
ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரெனக்…
பெங்களூரில் வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் 26 வயதான மதுமிதா என்ற செவிலியர் மீது அவரது கணவர் வெங்கடேஷ் என்பவர்…
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே…
திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய…
மழையின் மெல்லிய சாரலும் குளிர்ந்த காற்றும் பால்கனி அமர்வை இதமாக்கிக் கொண்டிருந்த வேளையில், எதிரே இருந்த கட்டிடத்தின் 9வது மாடியில்…