பழைய தங்கத்தை விற்க இதுதான் சரியான நேரமா?… கோல்ட் குரு கொடுத்த ஷாக் அப்டேட்…!!!

Spread the love

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், வீட்டில் உள்ள பழைய தங்கத்தை விற்று லாபம் பார்ப்பது சரியான முடிவா என்பது குறித்து ‘கோல்ட் குரு’ சாந்த குமார் முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் தங்கத்திலிருந்து கச்சா எண்ணெய் பக்கம் திரும்பியுள்ளனர்.

இதன் காரணமாகவே தங்கம் விலை தற்காலிகமாகச் சரிந்துள்ளது. ஆனால், இந்தப் போர்ச் சூழல் முடிவுக்கு வந்து நிலைமை சீராகும்போது, தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயரத் தொடங்கும் என்றும், அடுத்த ஓராண்டில் தங்கம் விலை குறைந்தது 30% வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவர் கணித்துள்ளார்.

மேலும் பழைய தங்கத்தை விற்பது குறித்து அவர் கூறுகையில், தங்கத்தின் மூலம் கிடைத்த லாபத்தை எடுத்து அதை வேறு ஒரு லாபகரமான தொழிலிலோ அல்லது சொத்திலோ முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால் தாராளமாக விற்கலாம் என்றார்.

ஆனால், எந்தவித திட்டமும் இல்லாமல் சும்மா கையில் பணம் வைப்பதற்காகத் தங்கத்தை விற்பது புத்திசாலித்தனமல்ல. ஏனெனில், தங்கம் என்பது ஒரு வளர்ந்து வரும் சொத்து. சில மாதங்களிலேயே தங்கம் சவரன் 2 லட்சம் ரூபாயைத் தொடும் அளவுக்கு அதன் மதிப்பு உயரும் என்பதால், அவசரப்பட்டு விற்காமல் நீண்ட கால அடிப்படையில் சேமித்து வைப்பதே அதிக லாபத்தைத் தரும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Rajeshwari

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

14 minutes ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

24 minutes ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

45 minutes ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

55 minutes ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

2 மணத்தியாலங்கள் ago